தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிராக அட்டூழியங்களில் ஈடுபடுவதை ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக நிறுத்திக்கொள்ளாவிடில், தனது ஆதரவாளர்களுடன் புத்தமதத்திற்கு மாறப்போவதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மயாவதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நேற்றையதினம் நடைபெற்ற பகுஜன் சமாஜ் கட்சியின் மாநாடு மகாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளர்h.
பாபாசாகேப் அம்பேத்கர், இந்துவாக பிறந்த நான், இந்துவாக சாக விரும்பவில்லை என 1935ம் திகதி ஓர் அறிவிப்பை வெளியிட்டு இந்துமத தலைவர்களுக்கு 21 ஆண்டுகள் அவகாசம் வழங்கினார். ஆனால், அவர்களின் செயல்பாடுகளில் மாற்றம் என்பதனால் 1956ம் ஆண்டு புத்தமதத்திற்கு மாறினார்.
ஆனால், தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களை தொடர்ந்து சுரண்டப்படுகின்றார்கள். தலித் மற்றும் பிறப்படுத்தப்பட்ட மக்களையும், அவர்களின் தலைவர்களையும் ஜாதி ரீதியாகவும், மதரீதியாகவும் மரியாதை குறைவாக நடத்துவதை அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் தானும், தனது கோடிக்கணக்கான ஆதரவாளர்களும் புத்தமதத்திற்கு மாறுவோம் என மாயாவதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.