151
குளோபல் தமிழ்ச்செய்தியாளர்
மூன்று கோடி ரூபா பெறுமதியான தங்கத்தை நாட்டுக்குள் கடத்தி வர முயற்சித்த நபர் ஒருவரை விமான நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சட்டவிரோதமான முறையில் விமான பயணி ஒருவரைப் பயன்படுத்தி டுபாயிலிருந்து இலங்கைக்கு இந்த தங்கம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஐந்து கிலோ கிராம் எடையுடைய தங்கம் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்தின் சுங்கப்பிரிவினர் குறித்த சந்தேக நபரை இன்றைய தினம் கைது செய்துள்ளனர். சொக்லெட் பை ஒன்றில் மிகவும் நுட்பமான முறையில் தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்தாகத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love