ஜம்மு-காஷ்மீரில் பனிமழை பெய்து வருவதால் வீதியெங்கும் பனிகட்டிகள் குவிந்து காணப்படுவதாகவும் இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜம்மு- காஷ்மீரில் , ஜம்முவையும் காஷ்மீரையும் இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலையான ஜம்மு – ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே கடுமையான பனிப்பொழிவு காணப்படுகின்ற நிலையில் ஜம்மு – காஷ்மீரில் இந்த வாரம் பனிப்பொழிவு அதிக அளவில் இருக்கும் எனவும், பனிமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் வானிமை மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இன்று அதிகாலை ஜம்மு-காஷ்மீரில் மழை போன்று பனி கொட்டியதெனவும் இதனால் வீதியெங்கும் பனிக்கட்டிகள் காணப்படுவதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதேவேளை சென்னையிலும் கடுமையான பனிமூட்டம் காரணமாக சென்னையில் விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.