தான் கால்பந்தின் கடவுள் அல்ல என மரடோனா தெரிவித்துள்ளார் கால்பந்து விளையாட்டின் ஜாம்பவான் என போற்றப்படும் அர்ஜென்டினா வீரர் டியேகோ தான் கால்பந்தின் கடவுள் அல்ல எனத்
தற்போது இந்தியாவின் கொல்கத்தா சென்றுள்ள அவர் அங்குள்ள 12 அடி உயர அவரின் சிலையை திறந்து வைத்து பேசிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளர்h. தன்னுடைய சிலையை தானே திறப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது என மாரடோனா தெரிவித்துள்ளார். அன்னை தெரசா உருவாக்கிய தொண்டு நிறுவனங்களுக்காக நேற்று அவர் கால்பந்து விளையாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அர்ஜென்டினா 1986-ம் ஆண்டு மரடோனா. தலைமையில் உலகக்கோப்பை பெற்றிருந்தது. தனது அபார ஆட்டத்தால் தனி ஒரு மனிதனாக நின்று கோப்பையை வாங்கிக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.