166
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அரசியல் நாடகங்களைக் கண்டு மக்கள் ஏமாந்துவிடக் கூடாது என ஜே.வி.பி கட்சி தெரிவித்துள்ளது. கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் சிலர் ஆளும் கட்சியில் இணைந்து கொள்வது தொடர்பில் ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இவ்வாறான கருத்தை வெளியிட்டுள்ளார்.
நலன்களைக் கருத்திற் கொண்ட சிலர் கட்சித் தாவி வருவதாகத் தெரிவித்துள்ளார். முதல்நாள் இரவு அரசாங்கத்திற்கு எதிராக வாக்களித்துவிட்டு மறுநாள் அரசாங்கத்தில் பெண் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இணைந்து கொண்டதாகவும் அவருக்கு வெட்கம் இருக்காதா எனவும் அனுரகுமார திஸாநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.
Spread the love