150
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தேர்தல் சட்டங்களை கடுமையாக அமுல்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை நடைபெறுகின்ற நிலையில் தேர்தல் சட்டங்கள் கடுமையாக அமுல்படுத்தப்பட வேண்டுமென தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய உத்தரவிட்டுள்ளார்.
சட்டத்தை மதித்து செயற்பட வேண்டியது அனைத்து அரசியல் கட்சிகளினதும் கடப்பாடு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் சட்டங்களை மீறுவோரை கட்டுப்படுத்துவது காவல்துறையினராலோ அல்லது தேர்தல் ஆணைக்குழுவினாலோ முடியாது எனவும் சுயமாகவே கடப்பாடுகளை நிறைவேற்றிக்கொள்ள வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love