குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்கள் தொடர்பில் மட்டுமே ஐக்கிய நாடுகள் அமைப்பு கரிசனை கொண்டுள்ளதாக அட்மிரால் சரத் வீரசேகர குற்றம் சுமத்தியுள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரதிநிதிகள் இலங்கைக்கு பயணம் செய்யும் போது அநேக சந்தர்ப்பங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலைகள் மற்றும் முகாம்களை மட்டுமே பார்வையிடுகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
படைத்தரப்பினர் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறித்து கவனம் செலுத்தப்படுவதில்லை என குறிப்பிட்டுள்ள அவர் கடற்படை உயர் அதிகாரிகளான கமாண்டர்கள் தசநாயக்க மற்றும் சுமித் ரணசிங்க ஆகியோர் நீண்ட காலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும் சில அரசியல்வாதிகள் எவ்வித கொள்கையும் இன்றி பணத்திற்காக கட்சி மாறி வருவதாகவும் சரத் வீரசேகர குற்றம் சுமத்தியுள்ளார்.