151
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மலேசிய பிரதமர் தத்தோ மொஹமட் நாஜிப் துன் அப்துல் ரசாக் எதிர்வரும் வாரம் இலங்கைக்கு பயணம் செய்ய உள்ளார்.
எதிர்வரும் 17ம் திகதி முதல் 19ம் திகதி வரையில் அவர் இலங்கையில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகிறது. இலங்கை பயணத்தை முடித்துக் கொண்டு அவர் மாலைதீவிற்கு செல்ல உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் 2020ம் ஆண்டில் மலேசியாவில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கிலும், பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாடு தொடர்பில் கலந்துரையாடும் நோக்கிலும் இந்த பயணம்; அமையும் என தெரிவிக்கப்படுகிறது.
Spread the love