சென்னையில் உள்ள உணவகத்தில் உணவு பரிமாறுவது வாடிக்கையாளர்கள் இடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையின் ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள ‘ரோபோட்’ என்ற சைனீஸ் உணவகத்தில் மனிதர்களுக்கு பதிலாக ரோபோட்கள் உணவு பரிமாறுவனவான செயல்படுகின்றன. இதற்காக இந்த உணவகத்தின் உரிமையாளர் சீனாவில் இருந்து 4 ரோபோக்களை இறக்குமதி செய்துள்ளார்.
உணவகத்தில் உள்ள மேசையில் பொருத்தப்பட்டுள்ள ஐ-பாட் மூலம் வாடிக்கையாளர்கள் உணவை ஓர்டர் செய்யலாம். அது டிரன்ஸ்மீட்டர் மூலமாக சமையல் அறைக்கு செய்தி சென்றடையும். அதை கண்ட சமையல் காரர்கள் சமைத்து அதனை ரோபோட்டின் கையில் உள்ள தட்டில் வைத்து அனுப்புவர். அது உணவை வாடிக்கையாளர்களிடம் கொடுக்கும்.
ரோபோட்டில் பொருத்தப்பட்டுள்ள சென்சர்கள் மூலம் அவை வாடிக்கையாளர்களை சென்றடையும். ரோபோவானது வாடிக்கையாளர் வாசலில் வரும் போதே அவர்களை வரவேற்று மேசையில் அமர வைக்கும். வாடிக்கையாளர்களை நினைவில் கொண்டு மீண்டும் உணவகத்திற்கு வந்தால் அவர்களை அடையாளம் கண்டு கொள்ளும். மேலும், உணவகத்தில் உள்ள ரோபோக்களுடன் செல்பி எடுத்துக் கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
எப்போதும் மனிதர்கள் உணவு பரிமாறி பார்த்த வாடிக்கையாளர்க்கு ரோபோர்ட் உணவு கொடுப்பது ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளதனால் இந்த உணவகம் மிகவும் பிரபலமடைந்து வருகின்றதென தெரிவிக்கப்பட்டுள்ளது