குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மக்களுக்காகவே போட்டிகளில் பங்கேற்பதாக அமெரிக்க பனிச்சறுக்கு வீராங்கனை லின்ட்ஸி வொன் தெரிவித்துள்ளார். வடகொரியாவில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டித் தொடரில் வொன் பங்கேற்க உள்ளார். இந்தநிலையில் 33 வயதான வொன், கடந்த வாரம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்பை விமர்சனம் செய்திருந்தார்.
ஜனாதிபதிக்காக போட்டிகளில் பங்கேற்கவில்லை எனவும் நாட்டு மக்களின் சார்பில் போட்டியிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். உலகக் கிண்ண பனிச்சறுக்குப் போட்டித் தொடரில் வொன் உலக சம்பியன் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வீர வீராங்கனைகள் தனியொரு அரசியல் கட்சியை பிரதிநித்தவம் செய்யாது மக்களின் சார்பில் போட்டியிடுவதாகத் தெரிவித்துள்ளார்.