தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணியர் சுவாமி கோவிலின் பிரகார மண்டபம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளனதில் பெண் பலியானதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் வெளிவட்ட பிரகாரத்தின் ஒரு பகுதி 10.45 மணியளவில் இடிந்து விழுந்துள்ளது. இதில் பெண் பக்தர் ஒருவர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு பக்தர் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. மீட்புப்பணிகளின் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். குறைவான பக்தர்கள் நடமாட்டம் கோவிலில் இருந்ததாக கூறப்படுகிறது.