சூழல் மாறுபாடு குறித்த யுனிசெவ்வின் முதலாவது நகைச்சுவை (comics) பாத்திர உருவாக்கப் போட்டியில் சென்னையைச் சேர்ந்த 21வயது பெண் வெற்றிபெற்றுள்ளார். சூழல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த யுனிசெவ் (unicef) அமைப்பும் கொமிக்ஸ் யுனைட்டிங் நேஷன்ஸ் (comics uniting nations) அமைப்பும் இணைந்து சர்வதேச அளவிலான போட்டி ஒன்றை நடத்தி இருந்தன.
சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் நகைச்சுவை (comics) கதாபாத்திரம் (comics ஒன்றை உருவாக்கும்படி போட்டியில் பங்கேற்றவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர். இந்தப் போட்டியில் 99 நாடுகளைச் சேர்ந்த 2,900 பேர் பங்கேற்றனர். இதிலிருந்து 20 பேரின் ஓவியங்கள் தேர்வுசெய்யப்பட்டு வாக்களிப்பு நடத்தப்பட்டது. அந்த இருபது பேரில் சாத்விகா ஒருவர் மட்டுமே இந்தியாவைச் சேர்ந்தவர்.
வெற்றிபெறும் பாத்திரத்தைத் தேர்வுசெய்ய இணையத்தில் நடந்த வாக்கெடுப்பில், 162 நாடுகளைச் சேர்ந்த 21,000 பேர் வாக்களித்தனர். இதில் சாத்விகா உருவாக்கிய நகைச்சுவை comics பாத்திரம் அதிக வாக்குகளைப் பெற்றது. சென்னை தண்டையார்பேட்டையில் வசிக்கும் சாத்விகா, அடிப்படையிலேயே நகைச்சுவை (comics) மீது ஈடுபாடு கொண்டவர். “நான் சிறுவயதிலிருந்தே என் உறவினர்கள் வெளிநாட்டிலிருந்து வாங்கிவரும் மார்வெல், டிசி நகைச்சுவைகளைப் (comics) படிப்பேன். எனக்கு எப்போதுமே சூப்பர் ஹீரோக்களை ரொம்பவும் பிடிக்கும். பூமியைக் காப்பாற்ற அப்படி ஒரு சூப்பர் ஹீரோ இருந்தால் எப்படியிருக்கும் என்ற கற்பனையில்தான் இந்தப் பாத்திரத்தை உருவாக்கினேன்” என சாத்விகா தெரிவித்துள்ளார்.
சூழலைக் காக்க சென்னைப் பெண் உருவாக்கிய புதிய மனிதன்:-
இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அவர் நியூயார்க்கில் பயணம் செய்துகொண்டிருந்தபோது, யுனிசெவ் இந்தப் போட்டி குறித்துக் கேள்விப்பட்டு இதில் கலந்துகொண்டார். சாத்விகா, தான் உருவாக்கியுள்ள பாத்திரத்திற்கு ‘ட்ரே’ (Tre)எனப் பெயர் சூட்டியிருக்கிறார். Tree என்ற ஆங்கில வார்த்தையிலிருந்து இந்தப் பெயரை உருவாக்கியதாகக் சாத்விகா கூறியுள்ளார். “ட்ரே ஒரு ஆய்வகத்தில் உருவான மனிதன். அந்த மனிதனை உருவாக்கும்போது, ஆய்வகத்தில் உள்ள விஞ்ஞானி அவனுக்குள் மரத்தின் டிஎன்ஏவையும் வைத்துவிடுகிறார். இதனால் அந்த மனிதன் பாதி மரமாகவும் பாதி மனிதனாகவும் பிறந்து வளர்கிறார்” என்று கூறும் சாத்விகா, இந்தப் பாத்திரத்தின் பின்னணியை விவரிக்க ஆரம்பிக்கிறார்.
2025ல் நடக்கிறது கதை. உலகில் பெட்ரோல், நிலக்கரி போன்ற பொருட்களைத் தொடர்ந்து பயன்படுத்துவதால் பூமியின் வெப்பநிலை உயர்ந்து, துருவப் பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் உருகுகின்றன. இதனால், பல இடங்களில் நிலப்பகுதிகள் கடல் நீரில் மூழ்கிவருகின்றன. இதற்கு தீர்வைத் தேடும் விஞ்ஞானி ஒருவர், மனிதனால் ஒளிச்சேர்க்கை செய்ய முடிந்தால், கார்பன் டை ஆக்ஸைடை எடுத்துக்கொண்டு ஒக்ஸிஜனை வெளிவிடுவான் என்று கருதுகிறார்.ஆகவே தன்னிடமிருந்தும் தன் மனைவியிடமிருந்தும் செயற்கைக் கரு ஒன்றை உருவாக்கி, அதில் மரத்தின் டிஎன்ஏ ஒன்றையும் சேர்த்து, மீண்டும் மனைவியின் வயிற்றில் வைத்துவிடுகிறார். அந்தக் குழந்தை பிறக்கும்போது பச்சை நிறத்தில் மஞ்சள் நிறக் கண்களுடன் பிறக்கிறது. தந்தையின் ஆய்வகத்திலேயே வளர்கிறது. ஆனால், தொடர்ந்து பரிசோதனைக்குள்ளாக்கப்படுவதால், அந்தக் குழந்தைக்கு மனித குலத்தின் மீதே வெறுப்பாக இருக்கிறது.
அந்தக் குழந்தையால் பூமியைக் காக்க முடியும் என்றாலும் மனிதர்கள்தான் இந்த அழிவுக்குக் காரணம் என்பதால், அதைச் செய்ய ட்ரே விரும்பவில்லை. 21 வயதில் ஆய்வகத்தை விட்டு வெளியேறும் ட்ரே, அமேஸான் காடுகளைச் சென்றடையும்போது இயற்கையுடன் ஏற்படும் உறவினால் மனதில் ஒரு மாறுதல் ஏற்படுகிறது. இந்த உலகம் அழிந்தால், மிருகங்களும் மரங்களும்கூட அழியும் எனக் கருதுகிறான் ட்ரே.
ஆகவே உலகைக் காப்பாற்றி, மனிதர்களுக்கு இன்னொரு வாய்ப்பளிக்கலாம் எனக் கருதுகிறான் அவன். அப்போதிலிருந்து அந்த பாத்திரத்தின் பெயர் ‘லைட் (Light)’. சூழலைக் காக்க சென்னைப் பெண் உருவாக்கிய புதிய மனிதன் இந்த ‘லைட்’ என்னென்ன சாகஸங்களைச் செய்வார், எப்படி சூழலைக் காப்பார் என்பது நகைச்சுவை (Comics) காமிக்ஸ் கதைகளாக இனி உருவாக்கப்படும். இதற்கென பிரத்யேகமான, தொழில்முறை eifr;Rit (comics) எழுத்தர்கள் சாத்விகாவுடன் இணைந்து பணியாற்றுவார்கள். ‘லைட்’ சாகஸம் செய்யும் முதலாவது நகைச்சுவை (comics) 2018 ஏப்ரல் 22ஆம் தேதி, அதாவது அடுத்த ஆண்டு பூமி தினத்தன்று வெளியாகும்.
“இந்தப் போட்டியில் பெரும் எண்ணிக்கையில் இளைஞர்கள் பங்குபெற்றது, இன்றைய தலைமுறை சூழல் மாறுபாட்டு பிரச்சனையை தீவிரமாக எடுத்துக்கொண்டிருக்கிறது என்பதை உலகத் தலைவர்களுக்குச் சொல்லியிருக்கிறது” என யுனிசெவ்வின் செய்தித் தொடர்பு இயக்குனரான பலோமா எஸ்கிதரோ ஒரு செய்திக் குறிப்பில் தெரிவித்திருக்கிறார். சாத்விகா இந்தப் படத்தை தன்னுடைய ஐ-பாட்டிலேயே (Ipad) வரைந்திருக்கிறார். சென்னை ஸ்டெல்லா மேரி கல்லூரியில் விஷுவல் ஆர்ட்ஸ் படிப்பில் இளங்கலையை முடித்திருக்கும் இவர், தன்னுடைய கதாபாத்திரம் நகைச்சுவையாக (comics) உருமாறுவதைக் காண தற்போது ஆவலுடன் காத்திருக்கிறார்.
மூலம் – BBC