இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யும் தேயிலைக்கு விதித்துள்ள தற்காலிக தடையை நீக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார். ரஷ்ய ஜனாதிபதி விளாடீமீர் புட்டீனிடம் உத்தயோகப்பூர்வமாக அறிவித்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஹப்புதளை பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக ரஷ்ய அரசுடன் கலந்துரையாடல்களை முன்னெடுக்க அமைச்சர் நவீன் திசாநாயக்க தலைமையிலான குழு ஒன்று ரஷ்யாவுக்கு செல்லவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைத் தேயிலை இறக்குமதியை வரையறுத்துக் கொள்ள ரஸ்யா தீர்மானம் –
15.12.17
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கைத் தேயிலை இறக்குமதியை வரையறுத்துக்கொள்ள ரஸ்யா தீர்மானித்துள்ளது. இலங்கையிலிருந்து ரஸ்யாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட ஒரு தொகுதி தேயிலையில் வண்டுகள் காணப்பட்டதனால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. தற்காலிக அடிப்படையில் இலங்கை விவசாய இறக்குமதிகளுக்கு ரஸ்யா வரையறைகளை விதித்துள்ளது. எதிர்வரும் 18ம் திகதி முதல் இந்த தற்காலிக தடை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
ரஸ்ய தேயிலை சந்தையில் 23 வீதத்தை இலங்கை நிரம்பல் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. ரஸ்யாவின் இந்த வரையறைகள் இலங்கையின் தேயிலை ஏற்றுமதியை வெகுவாக பாதிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.