Home இந்தியா காஸ்மீரில் காதல் வயப்பட்ட திருமணம் எனக் கூறி ஒரே பாடசாலையில் கற்பித்த திருமண தம்பதிகள் பதவி நீக்கம்…

காஸ்மீரில் காதல் வயப்பட்ட திருமணம் எனக் கூறி ஒரே பாடசாலையில் கற்பித்த திருமண தம்பதிகள் பதவி நீக்கம்…

by admin


இந்திய காஷ்மீர் மாநிலம் புல்வானாவில் முஸ்லிம் அமைப்புக்கு சொந்தமான பாடசாலையில் கற்பித்து வந்த ஆசிரியர் தாரிக்பகத், ஆசிரியை சுமையா பஷீர் ஆகியோர் காதலித்து திருமணம் செய்ததாக கூறி பணியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர்.

ஆசிரியர் தாரிக்பகத், ஆசிரியை சுமையா பஷீர் இருவரும் காதலித்ததாகவும், பின்னர் அவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு, திருமணம் நடந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில். திருமணம் நடந்த அன்று அவர்கள் இருவரையும் பணி நீக்கம் செய்து பாடசாலை நிர்வாகம் உத்தரவிட்டது. இதுபற்றி கருத்து தெரிவித்த நிர்வாக தலைவர் பஷீர்மசோதி, “இந்த ஆசிரியர் தம்பதி திருமணத்திற்கு முன்பு காதலித்து இருக்கிறார்கள். ஒரே பாடசாலையில் ஆசிரியர் பணியில் இருப்பவர்கள் இதுபோல் காதல்வயப்படுவதால் அது மாணவர்களை பாதிக்கும். எனவே அவர்களை பணி நீக்கம் செய்திருக்கிறோம்” எனக் கூறினார்.

ஆனால் இதனை ஆசிரியர் தம்பதியினர் ஏற்க மறுத்துள்ளனர். இதுபற்றி கருத்து வெளியிட்ட தாரிக்பகத், “எங்களது திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பே எங்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. இதுபற்றி பாடசாலை நிர்வாகத்திற்கு நன்றாகவே தெரியும். திருமணம் நிச்சயம் நடந்ததும் எனது மனைவி பாடசாலை ஆசிரியர்களுக்கு விருந்து அளித்தார். அப்போதெல்லாம் நிர்வாகம் எங்களிடம் எதுவும் கேட்கவில்லை. நாங்கள் காதல் வயப்பட்டதாக தெரிந்திருந்தால் அப்போது கேட்டிருக்கலாம். எங்களிடம் ஒரு விளக்கம் கூட கேட்கவில்லை. திருமணத்திற்காக ஒரு மாதத்திற்கு முன்பே நாங்கள் விடுமுறை கேட்டு விண்ணப்பித்திருந்தோம். பாடசாலை பள்ளி நிர்வாகம் எங்களுக்கு விடுமுறை அளித்தது. நாங்கள் காதலிக்கவில்லை. அப்படி காதலித்திருந்தால் முன்கூட்டியே நிர்வாகத்திற்கு ஏன் தெரியவில்லை. நாங்கள் காதலித்ததாக திருமண அறிவிப்பு வெளியிட்டதற்கு பிறகு சொல்கிறார்கள். நாங்கள் முறையாக திருமணம் செய்திருக்கிறோம். எந்த குற்றத்தையோ, வேதனைப்படும்படியான சம்பவத்தையோ செய்யவில்லை.” எனத் தெரிவித்தார்.

இந்தப் பாடசாலையில் 2 ஆயிரம் மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். 200 ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More