164
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சராக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீயானி விஜேவிக்ரம இன்று (15) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
இதுவரையில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியுடன் இணைந்து பணியாற்றி வந்த ஸ்ரீயானி விஜேவிக்ரம அண்மையில் ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்து அரச தரப்புடன் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் பைசல் முஸ்தபாவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.
Spread the love