தான் ஓய்வு பெற வேண்டிய நேரம் வந்து விட்டது எனவும் விரைவில் ஓய்வு பெறுவேன் எனவும் இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் வரலாற்றில் அதிக ஆண்டுகள் அதாவது சுமார் 17 ஆண்டுகள் அவர் தலைவராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள சோனியா அமெரிக்காவுக்கு சென்று அறுவை சிகிச்சை செய்து கொண்டதன் பின்னர் தீவிர அரசியலில் ஈடுபடவில்லை. வீட்டில் இருந்தவாறே கட்சி வேலைகளை பார்த்தவண்ணம் இருந்த அவர் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலக விருப்பம் தெரிவித்தார்.
இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக ராகுல் காந்தி கடந்த 11ம் திகதி போட்டியின்றி ஏகமனதாக தேர்ந்து எடுக்கப்பட்டார். அவர் நாளை சனிக்கிழமை முறைப்படி தலைவர் பொறுப்பை ஏற்க உள்ளார்.
இந்த நிலையில் பாராளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்க வந்த சோனியா இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த போது ஓய்வு மட்டும்தான் இனி என் வேலை. நான் ஓய்வு பெற வேண்டிய நேரம் வந்து விட்டது. விரைவில் ஓய்வு பெறுவேன் எனத் தெரிவித்துள்ளார்.
;.