விக்ரம் வேதா திரைப்படம் தனது வரலாறில் முக்கிய இடத்தில் இருக்கும் என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். புஷ்கர் – காயத்ரி இயக்கத்தில் மாதவன் – விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகியிருந்தது. விக்ரம் வேதா திரைப்படம் கடந்த ஜுலை 21-ஆம் திகதி வெளியாகியிருந்தது. விஜய் சேதுபதி – மாதவன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த நல்ல வரவேற்பை பெற்று 100 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
கதிர், வரலட்சுமி, ஷ்ரத்தா ஸ்ரீநாத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தின் 100-வது நாள் கொண்டாட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி, கதிர், இயக்குநர் புஷ்கர் – காயத்ரி, தயாரிப்பாளர் சசிகாந்த், சாம்.சி.எஸ் உள்ளிட்ட ஹவிக்ரம் வேதா’ படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.
இங்கு பேசும் போதே விஜய் சேதுபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு தெரிந்தவரை, தர்மதுரை படத்திற்கு பின்னர் தனது நடிப்பில் 100 நாட்களை கடந்து ஓடும் படமாக விக்ரம் வேதா அமைந்ததில் மகிழ்ச்சி எனத் தெரிவித்த அவர் பலரும், பல்வேறு விதத்தில் பாராட்டிய படம் தான் விக்ரம் வேதா எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த படத்தால் மக்களின் அன்பையும், நன்மதிப்பையும் சம்பாதித்திருக்கிறேன் எனத் தெரிவித்த அவர் தன்னை வேறுவிதமாகக் காட்டி மக்களிடம் கொண்டு சேர்த்த புஷ்கர் – காயத்ரிக்கும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.