குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
டென்னிஸ் வீரர் அலிஜாஸ் பிடென் (Aljaz Bedene ) ஸ்லோவேனியாவை மீளவும் பிரதிநிதித்துவம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். உலக டென்னிஸ் தர வரிசையில் 49ம் இடத்தை வகித்து வரும் பிடென் இனி வரும் காலங்களில் பிரித்தானியாவை பிரதிநிதித்துவம் செய்வதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.
எனினும், டென்னிஸ் வீரர் ஒருவர் இரண்டு நாடுகளை பிரதிநிதித்துவம் செய்ய முடியாது என்ற புதிய நியதி அறிமுகம் செய்யப்பட்டது. இதனால், மீளவும் தனது சொந்த நாடான ஸ்லோவேனியாவை பிடென் இனி வரும் காலங்களில் பிரதிநிதி;த்துவம் செய்ய உள்ளார். 28 வயதான பிடென் கடந்த 2015ம் ஆண்டில் பிரித்தானிய குடியுரிமையை பெற்றுக்கொண்டார்.
எதிர்வரும் 2020ம் ஆண்டில் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடும் நோக்கில் தாம் முயற்சிகளை எடுத்து வருவதாகவும் பிறந்த நாடான ஸ்லோவேனியாவை பிரதிநிதி;த்துவம் செய்ய உள்ளதாகவும் பிடென் தெரிவித்துள்ளார்.