குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ரஸ்யாவின் முன்னாள் அமைச்சர் அலெக்ஸி உல்லுகேயேவ் ( Alexei Ulyukayev ) க்கு எட்டாண்டுகள் காலம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ரஸ்யாவின் முன்னாள் பொருளாதார அமைச்சரான அலெக்ஸி உல்லுகேயேவ்க்கே மொஸ்கோ நீதிமன்றம் இந்த தண்டனையை விதித்துள்ளது.
ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாக அலெக்ஸி உல்லுகேயேவ் மீது குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டிருந்தது. சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக 2.2 மில்லியன் அமெரிக்க டொலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. 61 வயதான அலெக்ஸி உல்லுகேயேவ் கடந்த 2016ம் ஆண்டு ஊழல் மோசடி குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருந்தார். அரசாங்கத்திற்கு சொந்தமான எண்ணெய் நிறுவனமொன்றில் பாரியளவில் மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.