குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கையின் தேசிய காவல்துறை ஆணைக்குழுவினை வலுவானதாகக் வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சட்டவிரோத தடுத்து வைப்புக்கள் குறித்த ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரதிநிதிகள் அண்மையில் இலங்கைக்கு பயணம் செய்திருந்தனர். இந்த பயணத்தினை முடித்துக் கொண்ட போது நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளனர்.
காவல் நிலையங்களில் இடம்பெறும் சட்டவிரோத கைதுகள், தடுத்து வைப்புக்கள் மற்றும் சித்திரவதைகள் தொடர்பிலான முறைப்பாடுகளை விசாரணை செய்யக்கூடிய வலுவான பொறிமுறைமை தேசிய காவல்துறை ஆணைக்குழுவிடம் கிடையாது என தெரிவித்துள்ளனர்.
இலங்கை பயணம்; தொடர்பிலான அறிக்கை ஒன்று , ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் சமர்ப்பிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது