கனடாவின் மிகப்பெரிய பணக்காரர்களான பேரி ஷெர்மன்,மற்றும் அவரது மனைவி ஹனி ஷெர்மன் ஆகியோர் இறந்து கிடந்தமை பெரும் புதிராக உள்ளது எனவும்; விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது என்வும் கனடா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கனடாவின் மிகப்பெரிய மருந்து உற்பத்தி நிறுவனமான அபோடெக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் பேரி ஷெர்மன் தம்பதியினரே இவ்வாறு உயரிழிந்த நிலையில் காணப்பட்டுள்ளனர். இவர்களது உடலகள் கனடாவின் டொராண்டோ நகரின் வடகிழக்குப் பகுதியில் போர்வை ஒன்றில் சுற்றப்பட்டு அவர்களது வீட்டிலிருந்து அகற்றப்பட்டு, வாகனம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருவரும் இறந்து கிடந்த சூழ்நிலை சந்தேகத்துக்கிடமாக உள்ளது எனவும் இவர்களது வீட்டுக்குள் யாரும் புகுந்து கொலை செய்தமைக்கான தடயங்கள் எதுவும் கிடைக்கவி;ல்லை என மனித விரோதக் கொலைகளை கண்டுபிடிக்கும் விசாரணை புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த ஷெர்மன் தம்பதியினர் அண்மையில் தங்கள் வீட்டினை விற்பனை செய்வதற்காக அறிவிப்பு விடுத்திருந்தத நிலையில் ரியல் எஸ்டேட் ஏஜெண்ட் ஒருவர்தான் தம்பதியினரின் உடலை கண்டுபிடித்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
75 வயதான ஷெர்மன் 1974-ம் ஆண்டு அபோடெக்ஸ் நிறுவனத்தை சொந்தமாக உரிமை கொண்டதன் பின்னர் குறைந்த விலை ஜானரிக் மருந்துகளை அறிமுகம் செய்து பெரிய அளவில் சந்தையில் தன் நிறுவனத்தை நிலைநாட்டியிருந்தார். இவரது சொத்துக்களை 3.2 பில்லியன் டொலர்கள் என போர்ப்ஸ் நிறுவனம் நிர்ணயித்திருந்தது
அபோடெக்ஸ் நிறுவனம் உலகில் 7-ம் இடத்தில் உள்ள மிகப்பெரிய ஜானரிக் மருந்து உற்பத்தி நிறுவனமாகும். இந்நிறுவனத்தில் சுமார் 11,000 பேர் பணியாற்றி வருகின்றனர். 45 நாடுகளில் இவரது மருந்துகள் விற்கப்படுவதுடன் ஆண்டு விற்பனை சுமார் 2பில்லியன் கனடா டொலர்களாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக சேவைகளிலும் ஆர்வம் காட்டி வந்த இந்த தம்பதியினர் மருத்துவமனைகள், கல்விநிலையங்கள், யூத அமைப்புகளுக்கு பெரிய அளவில் பொருளுதவி செய்து வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களது இழப்பு கனடாவுக்கு பெரியதொரு இழப்பாக கருதப்படுகின்றது.