187
கழக அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் ரியல் மட்ரிட் கழகம் சம்பியனானது. கழக அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி துபாயில் உள்ள ஷயத் ஸ்போர்ட்ஸ் சிட்டி மைதானத்தில் நேற்றையதினம் நடைபெற்றது.
இதில் ஸ்பெயினின் முன்னணி அணியான ரியல் மட்ரிட்டும், பிரேசிலின் சிறந்த அணியான க்ரேமியோ அணியும் போட்டியிட்டன. கிறிஸ்டியானோ ரொனால்டோ ஒரு கோல் அடித்தமையினால் மட்ரிட் அணி 1-0 என வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. கடந்த நான்கு ஆண்டுகளில் 3-வது முறையாக ரியல் மட்ரிட் கழகம் உலகக்கோப்பையை கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love