அண்மையில் கல்வி அமைச்சின் மூலமாக பாடசாலைகளுக்கு வாசிகசாலைகளுக்கான புத்தங்கங்களை கொள்வனவு செய்வதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளதுடன் இலவச சீருடைகளும் வழங்கப்பட்டன. இவற்றில் ஒரு சில அதிபர்கள் மோசடியில் ஈடுபடுவதாக தனக்கு தகவல்கள் கிடைத்துள்ளன எனவும் அவ்வாறான அதிபர்கள் உரிய முறையில் இனம் காணப்பட்டால் அவர்களை பதிவி நீக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தனக்கு கிடைத்த முறைப்பாடுகள் தொடர்பாக கல்வி அமைச்சின் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும்அவர்கள் இது தொடர்பாக நடவடிக்கை எடுத்து வருகின்றார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இது தொடர்பில் கல்வி அமைச்சின் மூலமாக மிகவிரைவில் சுற்று நிருபம் ஒன்றையும் பாடசாலைகளுக்கு அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.