குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சட்டவிரோத ஆட்கடத்தல்களை தடுக்க ஒத்துழைப்பு வழங்கப்படும் என மலேசியா தெரிவித்துள்ளது. இலங்கைக்கு பயணம் செய்துள்ள மலேசிய பிரதமர் நஜீப் பின் ரன் அப்துல் ரசாக் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்றைய தினம் சந்தி;த்திருந்தார்.
வர்த்தகம், முதலீடு, விவசாயம், புலனாய்வு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள இந்த சந்திப்பின் போது இணக்கம் காணப்பட்டுள்ளது. இராணுவப் பயிற்சிகளை நடாத்தவும் இந்த சந்திப்பின் போது இணக்கம் காணப்பட்டுள்ளது. மேற்குலக நாடுகளின் மனித உரிமை வரைவிலக்கணத்தை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் மேற்குலக நாடுகள் மனித உரிமை தொடர்பில் சில விடயங்களை திணிக்க முயற்சிப்பதாக மலேசிய பிரதமர் தெரிவித்துள்ளார். மலேசியா வழங்கி வரும் ஒத்துழைப்பு வரவேற்கப்பட வேண்டியது என இலங்கை ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.