258
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிபீர் ரக யுத்த விமானங்களை தரமுயர்த்துவது தொடர்பில் இஸ்ரேலுடன் இலங்கை அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. கடந்த 1995ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரையில் இலங்கை 16 கிபீர் ரக விமானங்களை கொள்வனவு செய்துள்ளது. 26 ஆண்டு கால யுத்தத்தின் போது குறைந்தபட்சம் ஏழு விமானங்கள் அழிவடைந்துள்ளன.
தற்போது காணப்படும் விமானங்களை பராமரித்து தரம் உயர்த்தும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, இராணுவ விமானங்களை கொள்வனவு செய்வது குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Spread the love