170
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பரீட்சையின் போது செல்லிடப்பேசி பயன்படுத்தும் மாணவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் பொறுப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தற்போது நடைபெற்று வரும் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றும் சில மாணவர்கள் செல்லிடப் பேசிகளை பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபடுவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட உள்ளன. சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
Spread the love