உத்தர பிரதேசத்தின் அலிகார் பகுதியில் இருக்கும் பாடசாலைகள் கிறிஸ்மஸ் கொண்டாட கூடாது என இந்து அமைப்பு ஒன்றுஎச்சரிக்கை விடுத்துள்ளது. தி ஹிந்து ஜக்ரான் மார்ச் என்ற இந்த அமைப்பு பாடசாலைகளுக்கு இதுகுறித்து கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த கடிதத்தில் தைரியம் இருந்தால் கிறிஸ்மஸ் நடத்தி பாருங்கள் என்று குறிப்பிடப்பட்டு உள்ளதாகவும் இந்த கடிதம் பாடசாலைகளுக்கு மட்டுமன்றி சில கல்லூரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையால் சில பாடசாலைகள் கிறிஸ்மஸ் கொண்டாட தடை விதிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
தி ஹிந்து ஜக்ரான் மார்ச் என்ற இந்த அமைப்பு விஸ்வ ஹிந்து பரிஷித் அமைப்பின் துணை அமைப்பெவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.