272
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கொழும்பில் யாசகம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் கொழும்பில் யாசகம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு நகர எல்லைக்குள் யாசகம் செய்வதற்கு தடை விதிக்கப்படுவதாக பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
சுமார் 600 யாசகர்கள் கொழும்பில் யாசகம் செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. உண்மையாகவே யாசகம் செய்வோர் தொடர்பில் ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், வர்த்தக ரீதியில் யாசகம் செய்ய அனுமதிக்கப்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love