159
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வேட்பு மனு நிராகரிக்கப்பட்டமை குறித்த ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளர்கள் மனுத் தாக்கல் செய்துள்ளனர். உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இவ்வாறு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றில் பொதுஜன முன்னணியின் வேட்பாளர்கள் மனுத் தாக்கல் செய்துள்ளனர். மஹரகம நகரசபைக்காக போட்டியிடும் நோக்கில் வேட்பு மனுத் தாக்கல் செய்து நிராகரிக்கப்பட்ட ஐந்து வேட்பாளர்களே இவ்வாறு மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
Spread the love