குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சில உள்ளுராட்சி மன்றங்களில் தனித்து போட்டியிட உள்ளதாக தமிழ் முற்போக்குக் கூட்டணி அறிவித்துள்ளது. கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், பிரதித் தலைவர் பழனி திகாம்பரம் உள்ளிட்டவர்கள் ; பங்கேற்றிருந்தனர். ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஓர் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் சில தொகுதிகளில் யானைச் சின்னத்தில் போட்டியிட உள்ளதாகவும் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தமது கட்சி வெற்றியீட்டும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.