நாடு கடத்தப்பட்டால் சித்திரவதைக்கு உள்ளாக நெரிடம் என தமிழ்ப் புகலிடக் கோரிக்கையாளர் அச்சம் வெளியிட்டுள்ளார். இலங்கை தமிழ் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் இவ்வாறு அச்சம் வெளியிட்டுள்ளார். நாடு கடத்தப்பட்டால் தாம் சித்திரவதைக்கு உள்ளாக நேரிடும் அல்லது மரணிக்க நேரிடும் என குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் குறித்து அவுஸ்திரேலிய புகலிடக் கோரிக்கையாளர் நலன் உரிமையாளர்கள் அவுஸரேலிய அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். இந்த வகையில் இவ்வாறு நாடு கடத்தப்பட உள்ள ராஜா என்ற இலங்கையைச் சேர்ந்த தமிழர் உள்ளிட்ட புகலிடக் கோரிக்கையாளர்களின் நலன்களை உறுதி செய்ய வேண்டியது அவசியமானது என அவுஸ்திரேலிய புகலிடக் கோரிக்கையாளர் நலன் உரிமையாளர்கள் கோரியுள்ளனர்.
அவுஸ்திரேலியாவிலிருந்து தமிழ் புகலிடக் கோரிக்கையாளர் நாடு கடத்தப்பட உள்ளார்:- 20.12.17 – 10:53
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அவுஸ்திரேலியாவிலிருந்து தமிழ் புகலிடக் கோரிக்கையாளர் நாடு கடத்தப்பட உள்ளார். புகலிடக் கோரிக்கை குறித்து பரிசீலனை செய்யாமலேயே இவ்வாறு இலங்கைத் தமிழர் நாடு அவுஸ்திரேலியாவிலிருந்து சிங்கப்பூர் வழியாக நாடு கடத்தப்பட உள்ளார். ராஜா கடந்த 2012ம் ஆண்டு அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசித்திருந்தார்.
புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்களது கோரிக்கைகளை ஒக்ரோபர் மாதம் 1ம் திகதிக்கு முன்னதாக சமர்ப்பிக்க வேண்டுமென அவுஸ்திரேலிய குடிவரவு குடியகழ்வு அமைச்சர் அறிவித்திருந்தார். அதன் பின்னரான புகலிடக் கோரிக்கை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
போலி புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு இடமளிக்கப்படாது என அவர் குறிப்பிட்டுள்ள நிலையிலேயே ராஜா என்ற புகலிடக் கோரிக்கையாளர் நாடு கடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது