வடக்கு கிழக்கு மக்களுக்காக இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் கீழ் நல்லிணக்க தொலைக்காட்சி சேவை ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்காக தனியான தற்போது வழங்கப்பட்டுள்ளதாக இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
குறித்த தொலைக்காட்சி சேவைக்கு தேவையான உபகரணங்கள் தற்போது கொள்வனவு செய்யவுள்ளதாகவும், கலையகம் அமைப்பதற்காக யாழ் மாவட்ட செயலாளர் ஊடாக யாழ்-மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரிக்கு சொந்தமான 100 பேர்ச்சஸ் இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2000 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இலங்கை ரூபவாஹினி கூட்டுதாபனத்தின் இரண்டாவது தொலைக்காட்சி சேவையில் அதிகமாக விளையாட்டு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுவதனால் வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் பேசும் மக்களுக்காக தனியான தொலைக்காட்சி சேவை ஒன்று எனவும் அமைச்சர் ராஜித குறிப்பிட்டார்.