ஐ.நாவின் மனித உரிமை விசாரணை அதிகாரி தங்கள் நாட்டிற்குள் செல்வதற்கு அரசு தடை விதித்துள்ளது. ரக்கைன் மாகாணத்தில் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட இனவெறித்தாக்குதல்கள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக ஐ.நாவின் விசாரணை அதிகாரி யாங்ஹீ லீ (Yanghi Lee ) எதிர்வரும் ஜனவரி மாதம் மியன்மார் செல்லவிருந்தார். இந்தநிலையில் அவர் நடுநிலையாக செயற்படவில்லை எனத் தெரிவித்து மியன்மார் அரசு இவர் மியன்மாருக்குள் நுழைவதற்கு தடை விதித்துள்ளது.
இதேவேளை ரக்கைன் மாநிலத்தில் மோசமான செயல்கள் இடம்பெறுவதனை தனக்கு விதிக்கப்பட்ட தடை உணர்த்துகின்றது என யாங்ஹீ லீ தெரிவித்துள்ளார். கடந்த யூலை மாதம் மியான்மாருக்கு சென்ற யாங்ஹீ லீஇ அங்கு ரோஹிஞ்சா முஸ்லிம்கள் நடத்தப்படும் விதம் குறித்து கவலை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
யாங்ஹீ லீ ஒருதலைப்பட்சமாக இருப்பதாகவும் அவர் மீது நம்பிக்கை இல்லாததாலும் அவருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மியான்மார் அரசசெய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.