குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வறுமையை ஒழிப்பதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பிராந்திய வலயத்தில் வறுமையை இல்லாதொழிப்பதற்கு ஒத்துழைப்பு அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் நேற்றைய தினம் நடைபெற்ற பிம்ஸ்டிக் மாநாட்டில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பிராந்திய வலயத்தில் மட்டுமன்றி உலகின் அனைத்து சமூகங்களிலிருந்தும் வறுமையை இல்லாதொழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். எவரும் பட்டினியில் வாழக்கூடாத என்பதனை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் இந்த மாநாட்டை நடத்தக் கிடைத்தமை மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.