குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
யாழ். அல்லைப்பிட்டியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த கொள்ளையர்கள் வீட்டின் உரிமையாளரை கட்டி வைத்துவிட்டு 20 பவுண் நகை மற்றும் 02 இலட்ச ரூபாய் பணம் என்பவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
அல்லைப்பிட்டி பகுதியில் நேற்று புதன்கிழமை அதிகாலை இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்று உள்ளது.
அது தொடர்பில் தெரியவருவதாவது, வீட்டின் உரிமையாளரின் மனைவி மற்றும் பிள்ளைகள் உறவினர்கள் வீட்டுக்கு சென்று இருந்த சமயம் வீட்டில் தனியாக உரிமையாளர் தங்கியுள்ளார்.
அந்நிலையில் அதிகாலை 01 மணியளவில் ஆறு பேர் கொண்டு கொள்ளை கும்பல் ஒன்று வீட்டின் கதவினை உடைத்து வீட்டினுள் உட்புகுந்து வீட்டின் உரிமையாளரை கட்டி வைத்து விட்டு 20 பவுண் நகை மற்றும் 02 இலட்ச ரூபாய் பணம் என்பவற்றை கொள்ளையடித்து தப்பி சென்றனர்.
அதன் பின்னர் காலை அயலவர்களால் உரிமையாளர் மீட்கப்பட்டு ஊர்காவற்துறை பொலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.