குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பரீட்சையின் பின்னர் கலகத்தில் ஈடுபட்டால் பரீட்சை பெறுபேறுகள் ரத்து செய்யப்படும் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்றைய தினம் நிறைவடைய உள்ளது. பரீட்சையின் நிறைவினைத் தொடர்ந்து மாணவர்கள் ஏதேனும் கலகத்தில் ஈடுபட்டால் அவ்வாறான மாணவர்களின் பெறுபேறுகளை இடைநிறுத்த நேரிடும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
பரீட்சையின் நிறைவின் பின்னர் மாணவ மாணவியர் அமைதியாக வீடுகளுக்கு செல்ல வேண்டுமென அவர் கோரியுள்ளார். கலகங்களில் ஈடுபடும் மாணவ மாணவியருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம், காவல்துறையினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்