மறைந்த கவிஞர் இன்குலாப் மற்றும் கவிஞர் யூமா வாசுகிக்கு 2017-ம் ஆண்டின் சாகித்ய அக்கடமி விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2017-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. மறைந்த கவிஞர் இன்குலாப் எழுதிய ‘காந்தள் நாட்கள்’ என்ற கவிதை தொகுப்பிற்காகவும், ‘கசாக்கின் இதிகாசம்’ என்ற மலையாள மொழி நூலை மொழிபெயர்த்ததற்காக யூமா வாசுகிக்கு சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மறைந்த கவிஞர் இன்குலாப்பின் இயற்பெயர் சாகுல் ஹமீத் என்பதாகும். கடவுள் மறுப்பாளரான இவர் பொதுவுடைமை சிந்தாத்த வாதியாக இருந்தார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மரணமடைந்தார். ஹிந்தி எதிர்ப்பு போராட்டம், தமிழ் தேசிய விடுதலை ஆகியவை குறித்து பல கட்டுரைகள், கவிதைகளை எழுதியுள்ளார்.
யூமா வாசுகியின் இயற்பெயர் மாரிமுத்து என்பதாகும். நுண்கலையில் பட்டம் பெற்றுள்ள இவர் பல கவிதை, கட்டுரைகளை எழுதியுள்ளார். இவரது ரத்த உறவு எனும் நூல் தமிழக அரசின் சிறந்த நூல்கள் என்ற வகையில் பரிசு பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.