குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக சம்பந்தன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர். உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் திருகோணமலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுடன் நீண்ட பேச்சுவார்த்தை நடத்தியதன் பின்னர், சம்பந்தன் கொழும்பு திரும்பியிருந்தார்.
அயர்வு காரணமாகவே அவர் நோய்வாய்ப்பு பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கட்சி விவகாரங்கள் தொடர்பில் கடந்த சில நாட்களாக நீண்ட நேரம் விவாதம் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. சம்பந்தனுக்கு சில மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.