டிசம்பர் 31ம் திகதி நடிகர் ரஜினிகாந்த் அரசியல் அறிவிப்பை வெளியிடவுள்ளதாக காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் டிசம்பர் 26 முதல் 31 வரை சென்னையில் தனது ரசிகர்களை சந்திக்கவுள்ளார். இந்த சந்திப்பை ஒட்டி தமது நண்பரும் அரசியல் ஆலோசகருமான தமிழருவி மணியனுடன் ரஜினி இன்று தனது போயஸ் கார்டன் இல்லத்தில் ஆலோசனை நடத்தியுள்ளார்.
குறித்த ஆலோசனையின் பின்னர் தந்தி தொலைக்காட்சிக்கு வழங்கிய தகவலிலேயே தமிழருவி மணியன் ரஜினி டிசம்பர் 31ல் அரசியல் அறிவிப்பை வெளியிடுவார் என்று கூறியுள்ளதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை செய்தியாளர்கள் சிலருக்கு தமிழருவி மணியன் விங்கிய தகவலில் ரஜினிகாந்துடனான இன்றைய சந்திப்பு வழக்கமான சந்திப்பு தான் எனவும் டிசம்பர் 26 முதல் 31 வரையிலான நாட்களில் ஏதேனும் ஒரு நாளில் ரஜினியே அரசியல் வருகை குறித்த அறிவிப்பை வெளியிடுவார் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் ரஜினியின் அறிவிப்புக்கு முன்பாக தான் எதையும் தெரிவிக்க முடியாது எனவும் ம் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நடிகர் ரஜினிகாந்த்தின் அரசியல் ஆலோசகராக தமிழருவி மணியன் ரகசிய உடன்படுக்கை செய்து கொண்டுள்ளதாகவும் இதனாலேயே அவர் ரஜினியுடனான இன்றைய சந்திப்பு குறித்து வெளிப்படையாக எந்த கருத்தையும் கூறவில்லை எனவும் அந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை நடிகர் ரஜினிக்காந்த எதி;ர்வரும் டிசம்பர் மாதம் 26ம் திகதி முதல் ரசிகர்களை சந்திக்க உள்ள நிலையில் சந்திப்பின் போது ரசிகர்களுக்கு விதிக்கப்பட்டு உள்ள கட்டுப்பாடுகள் குறித்தும் தகவல் வெளியாகி உள்ளது.
கோடம்பாக்கத்தில் உள்ள தனது ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரசிகர்களை சந்திக்க உள்ள நிலையில் அப்போது 15 மாவட்ட ரசிகர்களை மட்டுமே சந்திக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தினமும் காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரை நடக்க இருக்கும் இந்த சந்திப்பில், தினமும் 1000 ரசிகர்களை சந்திக்க உள்ளதாகவும் ரஜினிக்கு அருகில் செல்லும் ரசிகர்கள் யாரும் அவருக்கு சால்வையோ, மாலையோ அணிவிக்கக்கூடாது எனவும் ரஜினி தோள் மீது கை போட கூடாது எனவும் கை பிடித்து குலுக்கக் கூடாது எனவும் கட்டுப்பாடுகள் விதிக்க்பபட்டுள்ளதாம்.