முத்தரப்பு இருபதுக்கு கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக எதிர்வரும் மார்ச் மாதம் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா பெண்கள் அணிகள் இந்தியா செல்லவுள்ளன. சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை பெண்கள் கிரிக்கெட்டில் சம்பியன்ஷிப் என்ற புதிய லீக் தொடரை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி ஒவ்வொரு அணியும் ஏனைய அணிகளுடன் தலா மூன்று போட்டிகளில் தங்களது மைதானம் மற்றும் எதிரணி மைதானங்களில் விளையாட வேண்டும்.
அந்தவகையில் அவுஸ்திரேலிய பெண்கள் அணி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியா சென்று மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளன. இந்த தொடர் மார்ச் 12, 15 மற்றும் 18ம் திகதிகளில் பரோடாவில் நடைபெறவுள்ளன.
அதனைத் தொடர்ந்து இந்தியா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து இடையிலான முத்தரப்பு இருபதுக்கு கிரிக்கெட் தொடர் மார்ச் 22ம்திகதி ஆரம்பமாகவுள்ளது. இதன் இறுதிப் போட்டி ஏப்ரல் 3ம்திகதி இடம்பெறவுள்மை குறிப்பிடத்தக்கது.