குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கான செலவுகள் குறைக்கப்படும் என உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 2020ம் ஆண்டில் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி நடத்தப்பட உள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை நடாத்துவதற்காக 12.6 பில்லியன் டொலர்கள் செலவிடப்படும் என முன்னதாக உத்தேசிக்கப்பட்டிருந்தது.
எனினும் தற்போது இந்த செலவுகளிலிருந்து 300 மில்லியன் டொலர் செலவு குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவிதமாக இன்னும் இந்த ஒலிம்பிக் போட்டிகளுக்கான செலவுகள் குறைக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. ஜப்பானிய வரிய செலுத்துவோருக்கு அதிகளவு சுமை கொடுக்கக் கூடாது என்ற நோக்கில் இவ்வாறு ஒலிம்பிக் போட்டிகளுக்கான செலவு குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.