165
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அமெரிக்காவின் சமாதானத் திட்டங்களை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என பலஸ்தீன பிரதமர் மஹ்முத் அப்பாஸ் தெரிவித்துள்ளார். இஸ்ரேலுடனான எந்தவொரு சமாதானத் திட்டமும் அமெரிக்காவின் பரிந்துரைகளினால் இருக்கக் கூடாது எனவும், அவ்வாறான சமாதான திட்டங்களுக்கு இணங்கப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அண்மைய சில மாதங்களாக அமெரிக்கா, இஸ்ரேல் – பாலஸ்தீன சமாதான திட்டத்தை வடிவமைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, ஜெருசலேம் விவகாரத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய இரண்டு பலஸ்தீன பிரஜைகள் இஸ்ரேல் படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர்.
Spread the love