சிம்பாப்வேயின் புதிய ஜனாதிபதியான எமர்சன் முனங்காக்வா, அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதியான ரொபர்ட் முகாபேயை பதவியிலிருந்து அகற்றுவதற்கு வழிவகுத்த ராணுவ தளபதியை ஆளும் கட்சியின் துணைத் தலைவராக நியமித்துள்ளார்.
தனக்கு அரசியலில் பதவி ஏதாவது கிடைக்கும் என்ற எண்ணத்தில், ராணுவத் தளபதியாக இருந்த கான்ஸ்டான்டினோ சிவெங்கா அப்பதவியை ராஜினாமா செய்திருந்தார். இந்த நடவடிக்கையானது இவரை நாட்டின் துணை ஜனாதிபதியாக நியமிப்பதற்குரிய படிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. ராணுவத்தின் தலையீட்டால் ஜனாதி பதவியிலிருந்து முகாபே அகற்றப்பட்டு ஒரு மாதகாலத்திற்கும் மேலான நிலையில், சென்ற வாரம் ராணுவத் தளபதி பதவியிலிருந்து இவர் விலகினார்.
துணை ஜனாதி பதவியிலிருந்து முனங்காக்வாவை ஜனாதி முகாபே நீக்கிய பிறகு, கடந்த நவம்பர் மாதம் 20ம் தேதி ஆட்சியை கைப்பற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. முனங்காக்வாவை ஜனாதியாக நியமிப்பதற்கு பதில் முகாபேயின் மனைவியான கிரேஸை அஜனாதியாக்கும் முயற்சியாக இது கருதப்பட்டது.
ஆனால், முனங்காக்வா ராணுவத்துடன் வலுவான உறவை கொண்டிருந்ததால், இவ்விவகாரத்தில் ராணுவம் தலையிட்டு நாட்டின் ஜனாதியாக முனங்காக்வாவை தேர்வு செய்ததுடன் நவம்பர் 24ம் தேதி அவர் பதவியையும் ஏற்றுக் கொண்டார். முனங்காக்வாவை போன்று சிவெங்காவும் முகாபேயின் வலது கரங்களில் ஒன்றாக இருந்தவர். குறிப்பாக வெள்ளையர்கள் வசமிருந்த விவசாய பண்ணைகளை கைப்பற்றியதிலும், 2008ம் ஆண்டு நடந்த தேர்தலுக்கு பிறகு எதிர்ப்பாளர்களை கொடூரமான முறையில் கட்டுப்படுத்தியத்திலும் இவர் மையப்புள்ளியாக செயல்பட்டார். தேச பாதுகாப்பை அச்சுறுத்தும் மோசமான நிலையில் உள்ள சிம்பாப்வேயின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு உறுதியுடன் இருப்பதாக அவர் கூறுகிறார். ஏற்கனவே, ஜனாதி முனங்காக்வா இரண்டு முன்னாள் ராணுவ அதிகாரிகளை நாட்டின் அமைச்சர்களாக நியமித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தின் காப்புரிமைREUTERS
மூலம் -பிபிசி