174
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வேட்பாளர்கள் வீடுகளையே பிரச்சார அலுவலகங்களாக பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வீடுகளையே தங்களது பிரச்சார அலுவலகங்களாக பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென அறிவித்துள்ளது.
பிரச்சார அலுவலகங்கள் தொடர்பில் புதிய நியதிகள் உருவாக்கப்ட உள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தொகுதியை விட்டு வெளியே வசித்து வரும் வேட்பாளர்களுக்கு மட்டும் , அலுவலகம் அமைப்பதற்கு அனுமதி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love