170
ஏ-380 எனும் பயணிகள் விமானம் ஒன்று இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. நியூஸிலாந்தின் ஒக்லன்ட் நகரில் இருந்து துபாய் நோக்கி சென்ற போது எரிபொருள் பற்றாக்குறை இருப்பதனை விமானி அறிந்துகொண்டதன் அடிப்படையில் பண்டாரநாயக்கா விமான நிலையத்துடன் தொடர்புகொண்ட விமானி உடனடி தரையிறக்கத்திற்கான அனுமதியை பெற்று தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்பின்னர் 30,000 லீற்றர் எரிபொருளை பெற்றுக் கொண்ட அந்த விமானம் மீண்டும் தனது பயணத்தை தொடர்ந்தது. இதேவேளை இந்த விமானத்தில் 400 பயணிகள் மற்றும் 30 ஊழியர்கள் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love