குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மத்திய கிழக்கில் இரு நாட்டு தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டுமென பாப்பாண்டவர் முதலாம் பிரான்ஸிஸ் தனது நத்தார் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் – பலஸ்தீன பிரச்சினைக்கு இரு நாட்டுத் தீர்வுத் திட்டமே பொருத்தமானதாக அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரு தரப்பிற்கும் இடையில் பேச்சுவார்த்தை மூலம் காத்திரமான தீர்வுத்திட்டமொன்று எட்டப்படுவதற்கான சாத்தியங்கள் உருவாக வேண்டுமென பிரார்த்தனை செய்வோம் என அவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் பலஸ்தீன பிரச்சினையினால் அப்பாவி சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் யேசு கிறிஸ்துவை காண்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.