இலங்கையில் சுனாமிப் பேரலை தாக்கி பாரிய அழிவுகளை ஏற்படுத்தி இன்றுடன் 13 வருடங்கள் நிறைவடைகின்றதனை அடுத்து 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. இன்று காலை 09.25 முதல் 09.27 வரை சுனாமியால் உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக மௌன அஞ்சலி அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் சுமார் 35,000 உயிர்களைக் காவுக்கொண்ட சுனாமி ஏற்பட்டு இன்றுடன் 13 வருடங்கள் நிறைவடைகின்றன. 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி இலங்கைப் உட்பட பல ஆசிய நாடுகள் சுனாமியின் தாக்கத்துக்கு உட்பட்டு பல இலட்சம் உயிர்களையும், சொத்துக்களையும் , உடமைகளையும் இழந்திருந்தன.
இந்தவகையில் இலங்கையின் பல மாவட்டங்களிலும் இதனை நினைவுகூர்ந்து நினைவஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன.