குளோபல்தமிழ்ச் செய்தியாளர்
ஒப்பந்த முகாமைத்துவம் மற்றும் பொருட் பெறுகை நடைமுறை சம்பந்தமான சான்றிதழ் பயிற்சியில் சித்தி எய்திய அரச அலுவலர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் வட மாகாண ஆளுநர் றெயினோல்கூரே பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.
யாழ் நூலக கேட்போர் கூடத்தில் முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி அலகின் பணிப்பாளர் சிவபாதசுந்தரம் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.
வடமாகாண அரச திணைக்களங்களில் பணிபுரியும் அலுவலர்களின் திறமையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் வடமாகாணத்தில் முதன்முறையாக ஆளுநர் நெயினோல்குரே அவர்களின் ஆலோசனைக்கு அமைய இந்த பயிற்சி வகுப்புக்கள் நடைபெற்றன. இதற்கான பூரண அனுமதியினையும் ஆலோசனையினையும் ஆளுநர் வழங்கியிருந்தார்.
40 உத்தியோகத்தர்கள் பயிற்ச்சியில் தோற்றியிருந்தபோதும் 38 பேர் அதில் தேர்ச்சிபெற்றிருந்தனர். அவர்களுக்கான சான்றிதழ்களை ஆளுநர் றெயினோல்குரே வழங்கி வைத்தார். இந்நிகழ்வில் பிரதம செயலாளர் பத்திநாதன், பொதுச்சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் மோகன்ராசு உள்ளுராட்சி ஆணையாளர் பற்றிக்நஞ்சன், விவசாய அமைச்சின் செயலாளர் சத்தியசீலன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பொறியியலாளர் சேவி சண்முகானந்தன், பொறியலாளர் மெண்கண்டன், கணக்காய்வாளர் நாயகம் தேவயானன், பிரதிபிரதம செயலாளர் நிதி சந்திரகுமாரன், ஆளுநரின் செயலர் சட்டத்தரணி எல்.இளங்கோவன், முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்ச்சி அலகின் பணிப்பாளர் சிவபாதசுந்தரம் ஆகிய உயர் அதிகாரிகள் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு விரிவுரைகளை வழங்கினர்.