196
களனி தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய செயற்பாட்டாளர்கள் சிலர் இன்று (26) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதியை சந்தித்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டனர்.
களனி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்களான கனிஷ்க சமரசிங்க, நோபட் பெரேரா மற்றும் பேலியகொட நகரசபையின் முன்னாள் உறுப்பினர் லக்ஷ்மன் பெரேரா உள்ளிட்ட நீண்ட காலமாக ஐக்கிய தேசியக் கட்சிக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட செயற்பாட்டாளர்களும் இதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love