பிரிமீயர் லீக் தொடரில் விளையாடும் ரொட்டன்ஹாம் வீரர் ஹரி கேன் ( Hari Kane ) ஒரே வருடத்தில் 39 கோல்கள் அடித்து முறியடித்துள்ளார். 2017-ம் ஆண்டு மட்டும் லயனல் மெஸ்சி பார்சிலோனா மற்றும் அர்ஜென்டினா அணிகளுக்காக விளையாடி இதுவரை 54 கோல்கள் அடித்துள்ளார்.
இந்த வருடமும் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் மெஸ்சி இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிரிமீயர் லீக் தொடரில் புர்ன்லே அணியை எதிர்த்து விளையாடிய டொட்டன்ஹாம் அணி 3-0 என வெற்றி பெற்றது. இந்த மூன்று கோல்களையும் இங்கிலாந்தைச் சேர்ந்த ஹரி கேன் அடித்திருந்தார். 53 கோல்கள் அடித்துள்ள ஹரி இன்னும் ஒரு கோல் அடித்தால் மெஸ்சியின் கோல் எண்ணிக்கையை சமன் செய்து விடுவார் என காணப்பட்ட நிலையில் இன்று சவுதாம்டன் அணியை எதிர்கொண்ட டொட்டன்ஹாம் அணி 5-2 என வெற்றி பெற்றது.
இதில் ஹரி கேன் ஹட்ரிக் கோல் அடித்ததன்மூலம் 2017-ல் அதிக கோல் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அத்துடன் ஹரி கேன் 56 கோல்கள் அடித்து மெஸ்சியை பின்னுக்குள் தள்ளியுள்ளார்.மேலும், பிரிமீயர் லீக் கால்பந்து தொடரில் ஒரே ஆண்டில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையும் படைத்துள்ளார். இதற்கு முன்பு 1995-ம் ஆண்டு அலன் சியேரெர் 36 கோல்கள் அடித்ததே சாதனையை இருந்தது. தற்போது 39 கோல்கள் மூலம் ஹாரி கேன் சாதனைப் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.